கோபி மற்றும் பவானி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஓடத்துறை ஊராட்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களும், தொழிலாளர்களும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சீரான கால இடைவெளியில் போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் 14/12/2014 அன்று காலை 7 மணிமுதல் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் விண்ணப்பமும், பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களும் 05/01/2015 அன்று ஈரோடை மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி, தமிழ்நாடு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளரிடம் பணியை கையளித்துள்ளார்.