கிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் அக்டோபர் 1௦ அன்று மாலை ௦6 மணிக்கு ஓசூரில் நடந்தது.இதில் மேற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சோசை பிரகாசு, பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் சில கன்னட அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பது மற்றும் தமிழர்களுக்கு எங்கு இன்னல் நேர்ந்தாலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக குரல் கொடுத்து போராட்ட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ரகுநாதன், டம்பாச்சாரி, இனியன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.