விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக , இராசிவ்காந்தி அவர்களின் படுகொலையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு எதிராக செயல்படும், தமிழர் விரோத சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியை கண்டித்து 22.02.2014 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் விழுப்புரத்திலுள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தின் எதிரில் சோனியா காந்தி அவர்களின் உருவ பொம்மையை எரித்து நாம் தழிழர் கட்சி போராளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மாலை 7 மணியளவில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மா.செ.குமரேசன் அசர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளான சாய்ரா சிலம்பரசன், ஆறுமுகம், அருள், குடியரசு, சந்தோசு மாரியப்பன் கல்வி செந்தழிழ் மற்றும் நாம் தழிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.