பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் – எழுவர் விடுதலை கொண்டாட்டம்…

32

பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் ராசீவ் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்து சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பாட்சா, மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேலன், பண்ருட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், அண்ணாகிராமம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கணேசு, வீரக்குமார், பண்ரு்ட்டி நகர ஒருங்கிணைப்பாளர்கள் வினோத், வேல்முருகன், புருசோத் உட்பட திரளான நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்திஈரோடை மாவட்டம் கோபியில்-நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – நினைவு பரிசு
அடுத்த செய்திமாண்புமிகு தமிழக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றி… நன்றி….