நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, தோரணங்கள் என அப்பகுதியே விழாகோலம் பூண்டது.
இரண்டு பானைகளில் பொங்கல் பொங்கிய போது கூடியிருந்த மகளிர் பாசறை பெண்கள் குலவையிட்டு கும்மியடித்து ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.
பின்னர் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் பொங்கலையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
மதுரைவயல் பகுதி ஆற்றல் மறவர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.