நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டத்தில் 07.01.2014 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

79

உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின்
மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.  07.01.2014 அன்று ஏ.டி.சி திடலில் நடைப்பெற்றது.

தலைமை :- பேரா. பா. ஆனந்த், முன்னிலை தமிழ்பிரியன், உதயன், பேரா.ஏட்வின், சிறப்பு அழைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கலைக்கோட்டுதயம், பேரா. கல்யாணசுந்தரம், குமுதவள்ளி, மருத்துவர் பாலசுப்ரமணியம், திரு. பெஞ்சமின் கோவை, கோத்தகிரி, குன்னூர், பந்தலூர், கூடலூர் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் அணைவரும் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்
1. இந்துஸ்தான் புகைப்படக்சுருள் தொழிற்சாலையை நவீனமயமாக்கப்பட்டு, புணரமைத்து உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. மாவட்டம் முழவதும் அனுமதியின்றி அத்துமீறி கட்டப்பட்டிருக்கும் சொகுசு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுற்றுலா தளங்களுக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. நீலமலை மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பதாகைகளை அரசாணைப்படி தமிழில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருக்கும் வேலவியூ, கிராண்டில் காலனி,  அண்ணா நகர், மஞ்சனகொரை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் நிலப்பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

5. மேட்டுப்பாளையம் – கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை உட்பட மாவட்டம் முழுவதும் மழையால் பழதடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோடைக் காலங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நகராட்சி உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

7. நீலமலை மாவட்டம் முழுவதும் பிரிவு – 17 நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டு எந்த வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலங்களுக்கு உடனே பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

8. தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டை கட்டுபடுத்தவும், கோவை, திருப்பூர்,  ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் வறட்சியை போக்கவும் பாண்டியாறு புன்னம்புழா நீர் மின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

9. மலைகளின் அரசியாம் உதகையை சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து காக்கவும், கல்லாறு – கக்கநல்லா சாலைக்கு மாற்றுப் பாதையாக சிறியூர் – சத்தியமங்களம் சாலையை உடனே திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

10. தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் மாநில எல்லை யோரங்களில் வசிக்கும் வந்தேறிகளால் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் நடைபெறும் அதிகாரமீறல்கள் ஏமாற்று வேலைகள் தடுக்கப்பட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

12. மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிங்காரவேலன் குழு நிர்ணயித்த தொகை வசூலிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. நகராட்சி,  பேருராட்சி,  ஊராட்சிகளில் நடக்கும் அதிகார மீறல்களும் முறைகேடுகளும் விசாரிக்கப்பட்டு நடவடிகடகை எடுக்கப்பட வேண்டும்.

14. அரசு விழாக்களில் தமிழ் பாரம்பரிய இசைவாத்தியங்களை தவிர்த்து கேரள சென்டை மேளங்கள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

15. எல்லை யோரங்களில் நடக்கும் அரசி, மண்ணென்னை, மணல்,  மரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கடத்தலை தடுக்க தமிழகத்தை சேர்ந்த உணர்வுள்ள அதிகாரிகளையே பணியமர்த்தப்பட வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முந்தைய செய்திதமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம்
அடுத்த செய்திநாம் தமிழரின் தமிழ்த்தேசிய திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.