கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மாநில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்!

154

தியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற உள்ளது, இந்த எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தம்பிகள் எவ்வாறு களமாட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் தெற்கு அலுவலகத்தில் நடைபெற்றது ..கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பொருப்பாளர்கள் மோகன் ,சண்முகசுந்தரம், சிவக்குமார், பிரகாஷ், முருகானந்தம், கேத்தனூர் செந்தில் முன்னிலை வகித்தனர், இளைஞர் பாசறை சீனிவாசன், சரவணன், சதிசு குமார், கரும்புலி சுரேஷ், ராசு மோகன், கண்ணன், ராசுகுமார், தீபன், உதைய சூரியன், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில், சங்கர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பாக உருபாய் 1 லட்சம் நிதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.