நாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
22.12.2013 ”ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மு.கிளிக்குமார், மதன், சு.தமிழரசன், த.பாக்கியராசு, ஆர்.மணிகண்டன், முத்துசாமி, கிருட்டிணன், மணிவண்ணன், இராமகிருட்டிணன், பேரா.பா.ஆனந்த், பொன்.மோகன்தாசு, பாலசுப்ரமணியம், பைந்தமிழ் பாரதி, சிவக்குமாரன், விசயகுமார், காமராசு, விசயகுமார், ஆனந்த், சந்திரமோகன், பஞ்சநாதன் மற்றும் நகர ஒன்றிய கிளை அமைப்பாளார்கள் மற்றும் உறுப்பினார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தீர்மானங்கள் :
1. அட்டப்பாழ தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் கேரள காங்கிரசு அரசை வண்மையாக கண்டிக்கிறோம்.
2. நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினார்களின் ஊழல் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. ஊராட்சி மன்ற உறுப்பினார்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் பந்தலூர் ஒன்றிய நாம் தமிழர் சார்பில் மாபெரும் ஊராட்சி மன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தபடும்.
4. கக்கநல்லா, கல்லாறு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
5. மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினார்கள் தொடர்ந்து ஊழல் புகாரில் சிக்குவதால் அவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கபட வெண்டும்.
6. தெவாலா காட்டிமட்டம் பகுதியில் விதிமுறை மீறி 100 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர விடுதிகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
7. அந்த கட்டிடத்திற்கு பல்வேறு உரிமைகளை வர்ழ்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என ஏழு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.