காமன்வெல்த் மாநாடு சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் நடைபெறக்கூடாது என்றும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தியும் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கும்பகோணத்தில் தலைமை அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் தலைமை தாங்கினார். நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆதி.குமரவேல்,வழக்கறிஞர் பாசறை மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த், மாவட்ட பொருளாளர் பிரதீப், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தினேசுகுமார்,இளைஞர்பாசறை மாவட்ட இணைச்செயலாளர் ஒவியர் கார்த்திக்கேயன், நகர இளைஞர் பாசறை செயலாளர் மாதுளம் பேட்டை கார்த்திக்,ஒன்றியச்செயலாளர்கள் ஜெஸ்டீன், ஆல்வின்,மாணவப்பாசறை பொறுப்பாளர்கள் மணி,கெளதம், சதாம்ஹீசைன், அய்யப்பன், பிரசன்னா, தூயவன் ,சிபி, சதீஷ்குமார் மற்றும் மாணவர் பாசறை ,இளைஞர் பாசறையை சேர்ந்த தம்பிகளும் ,நாம் தமிழர் கட்சினரும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கைதாயினர். போராட்டம் நடந்த போது காவல்துறைக்கும், நாம் தமிழருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. கைதிற்கு பிறகு மண்டபத்தில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கு மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணி செந்தில் ஈழப்போராட்டமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். உணர்வெழுச்சியுடன் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டம் கும்பகோணம் பகுதியை போர்க்களமாக மாற்றியது.
முகப்பு கட்சி செய்திகள்