கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள்

83

கடலூர் மாவட்ட நாம் தமிழர்  கட்சி சார்பில்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்  நிகழ்வு பண்ருட்டியில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் மாவீரர்களுக்கு மாவீரர் தின பாடல் ஒலிக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் ஈகத்தினை நெஞ்சில் உறவுகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய செய்தித்தொடர்பாளர் வெற்றிவேலன் மாவீரர் தினத்தை விரைவில் தடையின்றி நடத்தவேண்டிய காலத்தை உருவாக்கவேண்டும் என்றார். சிறப்புரையாற்றிய கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மாவீரர் தினத்தை பற்றியும், ஈழத்தின் இன்றைய நிலையை பற்றியும், தமிழகத்தின் அரசியல் நிலை பற்றியும், நாம் இங்கே அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் எழுச்சியுடன் உரையாற்றினார். நிகழ்வில் கடலூர் கார்த்திக், செங்கோலன், பிரசன்னா பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் பாட்சா, பண்ருட்டி நகர இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விநோத்குமார், பண்ருட்டி 12வது வார்டு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், அண்ணாகிராமம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வீரகண்டமணி, உதய.கணேஷ், வீரக்குமார் உட்பட திரளான நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஆலங்குளம் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்ற அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம்.
அடுத்த செய்திபொன்னமராவதி ஒன்றியம், செம்மலாப்பட்டி கிராமத்தில் மாவீரர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.