கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம்

817

கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் (12.11.2013) அன்று நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரிபுலியூர் தொடர்வண்டி நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கடல்தீபன் அவர்கள் தலைமையில் திரண்ட நாம் தமிழர் உறவுகள், உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர்,
”இலங்கையே ஒரு சுடுகாடு! அங்கே எதற்கு மாநாடு? ” என்றும்
இனப்படுகொலை நடந்த இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தாதே!
இலங்கையை பொதுநலவாய கூட்டமைப்பில் இருந்து நீக்கு!
பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு முற்றிலுமாக புறக்கனிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்வண்டி வந்த பின்  நாம் தமிழர் உறவுகள் அனைவரும்  தொடர்வண்டியை மறி்த்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அழைத்து சென்றது. இந்த மறியல் போரட்டத்தில் கடலூர் குப்புசாமி, பிரபு, கார்த்திக், திரு, செந்தில், பண்ருட்டி வெற்றிவேலன், சையத்பாட்சா, வீரகண்டமணி, வேல்முருகன், குறிஞ்சிப்பாடி தாசு, பாலமுருகன் உட்பட திரளான நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

அங்கே  காவல்துறை செலவிலே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினோம். நவம்பர் 27 மாவீரர் நாள் பற்றியும், மாவீரர் நாள் நிகழச்சியில் பொதுமக்கள் அனைவரின் பங்கேற்பை ஏற்படுத்த மாவீரர் நாள் அன்று வீடுகள் தோறும் தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கேட்டுக்கொள்வது பற்றியும், கட்சியின் கட்டமைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. மே-18 நிகழ்ச்சியில் பற்றாக்குறையாக உள்ள நிதி ரூ.80,000-த்தை பொறுப்பாளர்கள் யார் யார் பங்கிட்டு கொடுப்பது என்பது பற்றி பேசப்பட்டு அவர்களிடம் நிதி கோரப்பட்டது.

முந்தைய செய்திகாமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க கோரி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம்: நூற்றுக்கணக்கனோர் கைது.
அடுத்த செய்திதூத்துக்குடி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது