காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அப்படி நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் மாபெரும் உண்ணா நிலைப் போராட்டம் கூடலூர், காந்தி திடலில் 20.10.2013 அன்று தொடங்கினர்.
அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தன் சொந்த நாட்டு மக்களையே இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய இலங்கையில் பொது நலவாய மாநாட்டை நடத்தக் கூடாது.
2. பொது நலவாய (காமன்வெல்த்) அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்.
3. பொது நலவாய நாடுகளின் முக்கிய உறுப்பு நாடான இந்தியா அந்த மாநாட்டை நடத்த துணைப்போக கூடாது.
4. தமிழர்கள் மீதும் தமிழர் நாட்டின் மீதும் இந்திய அரசு தொடர்ந்து வரும் விரோத போக்கை கைவிட வேண்டும்.
போன்ற பல தீர்மானங்கள் இந்த பட்டினி போராட்டத்தின் வாயிலாக ஒரு மனதாக நிறைவேற்றபட்டது.