தோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்து நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.

15

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது,தோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும் நிற வெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவை புறக்கணித்ததைப் போல இனப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளில் இருந்து நீக்கக்கோரியும் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு சார்பாக இன்று(07/10/13) மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.