“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” விழிப்புணர்வு பிரச்சாரம்

91

சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் 15-10-2013 அன்று காலை 10 மணி அளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இப்பிரச்சாரத்தை கும்பகோணம் நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா தலைமை ஏற்று நடத்தினார் .இந்நிகழ்வில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில்,மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வீரக்குமரன் என்கிற வினோபா, மாவட்ட துணைச்செயலாளர் அ.நாதன், மாவட்டப் பொருளாளர் கண்ணன், மாவட்ட கலை பண்பாட்டு பாசறை செயலாளர் ம.பிரதீப்,மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஓவியர் கார்த்திக்கேயன்,நகர கலை பண்பாட்டு பாசறை செயலாளர் ஆசிரியர் வீரப்பன், நகர இளைஞர் பாசறை இணைச்செயலாளர் மாதுளம் பேட்டை கார்த்திக்,மாவட்ட மாணவர் பாசறை இணைச்செயலாளர் கெளதம், நகர மாணவர் பாசறை இணைச்செயலாளர் அரவிந்த் ,நகர மாணவர்பாசறை துணைச்செயலாளர் அஸ்வின் மற்றும் அப்புனு உட்பட பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் ஒவ்வொரு பேருந்தாக ஏறி மக்களிடையே துண்டறிக்கை வழங்கி உரை நிகழ்த்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திகன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திஇலங்கைக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வழங்கக் கூடாது – மனித உரிமை கண்காணிப்பகம்