35 தமிழிக மீனவர்கள் விடுதலை!

10

இந்திய மீனவர்கள் 35 பேர் இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா கடற் பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மீதான விசாரணையை அடுத்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.

முந்தைய செய்திகெய்டியில் 18 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு – சிறீலங்கா படையினனுக்கு எதிராக விசாரணைகள்
அடுத்த செய்திதமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும்- பெ.மணியரசன்!