விக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்

39

மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம். இவ்வாறு ஆளும்கட்சி அஸ்வர் எம்.பி. மிரட்டும் பாணியில் தெரிவித்துள்ளார். மன்னார், வவுனியா, கிளிநொச்சி மக்களின் ஒருங்கிணைந்த பொதுக் கூட்டத்தில் அஸ்வர் எம்.பி. உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

30 வருடங்கள் கொடூர யுத்தம் நடத்தி பெற முடியாத ஈழத்தின் வடிவில், வடகிழக்கை ஒருங்கிணைத்து வேறு பகுதியைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் விக்னேஸ்வரன் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதிவிக்காகக் களமிறங்கி உள்ளார். வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தமது பகுதிக்கு மட்டும் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கேட்கிறார்.

தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வடமாகாணத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களிக்க ஆவலாக உள்ளார்கள். இதனை மகிழ்வாகக் கூறிக் கொள்கிறேன். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.