வடக்கில் தேர்தலை நடாத்தியமை தாய் நாட்டிற்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி மஹிந்த

16

மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடமேல், மத்திய மாகாணசபைகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது. வடக்கில் தேர்தல்களை நடாத்தக்கிட்டியமை தாய் நாடு அடைந்த வெற்றியாகும். மிகக் குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள். பாரிய அர்ப்பணிப்புடன் கிடைக்கப்பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். மோசமாக கடும்போக்குவாத கொள்கைகளினால் இந்த நோக்கங்களை அடைய முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திவடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்.
அடுத்த செய்திதம் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடமே வட மாகாணத் தேர்தல் முடிவு: நாம் தமிழர் கட்சி