ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அங்கிருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் ஜனாதிபதி பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கொமன்வெல்த் செயலாளர் கமலேஷ் சர்மாவுடனான சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த பங்கேற்றதால், குறிப்பிட்ட நேரத்துக்கு டுவிட்டர் உரையாடல் தொடங்கவில்லை.
எனினும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த உரையாடலுக்கு கேள்விகளை முன்கூட்டியே அனுப்பும்படியும் கேட்கப்பட்டது. தாமதமாக தொடங்கிய போதிலும், பல கேள்விகளுக்கு பதில் கொடுக்க நீண்ட தாமதம் ஏற்பட்டது. பின்னர், திடீரென, ஜனாதிபதி இன்னொரு கூட்டத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டு கேள்வி பதில் நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதனால், கேள்விகளை அனுப்பிய பலரும் ஏமாற்றமடைந்தனர்.
இதன் போது வன்னியில் விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து 3 இலட்சம் மக்களை படையினர் மீட்டதாக கூறுகின்றீர்களே அப்படியாயின் அந்த மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என ஒருவர் கேட்டுள்ளார். ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.
JDS @JDSLanka: @PresRajapaksa #AskMR Any thing to say about the 39 media workers killed/disappeared since May 2004?
Thrishantha @thrishantha: #AskMR who is a truly friendly country? one who buts our value added finished products, or one who stays silent about our HR violations?
Ijaz Hameed @jzhameed: How much did you spend on the underground shooting pad at your son’s residence close to Mt Lavinia ?? #AskMR @PresRajapaksa @RajapaksaNamal
Mario Arul @MarioArul: Erm… @PresRajapaksa: .@UKinSriLanka We have a policy of zero tolerance on sexual violence in conflict. #AskMR @nofirezonemovie
Thurai Loganathan @kopay: If you beleive you rescued the people those were held by LTTE, there were over 300,000 but the votes you got??????#askmr
Elmo Leon @elmoQ: @PresRajapaksa You look very fit and handsome for your age. How do you do it? #AskMR
slmachan @slmacha: #AskMR is ranil a good leader for you?
Zahran Careem @zahranc: RT “@RamanayakeR: In parliament they don’t answer our questions and now in twitter also” #AskMR
Juzer Kaed @Juzer03: May be this was the first and the last #AskMR Q&A session
Vimal Thiru @kavioviyan: #askmr go to hell you dirty pig.
Mohammed Fashlin @MohammedFashlin: #AskMR can you please concentrate hajj fair and cost of Sri Lankan muslims? because normal cost 150k but during hajj period it is >600k ?
Isuru Hettiarachchi @isuru71: Guys!! Don’t take it as a joke. You all will get white ven-ed #AskMR