டெல்லியில் நாளை இலங்கை போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை மீதான கருத்தரங்கு – முக்கிய எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்பு.

35

டெல்லியில் நாளை இலங்கை போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை மீதான கருத்தரங்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்கள், நீதியரசர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

நீதிபதி சச்சார், சுரேஷ்,  அஜித்சிங் பெயின்ஸ், பேராசிரியர். ஜக்மோஹன் சிங், கிலானி, பேரா.மணிவண்ணன்,  எழுத்தாளர் அருந்ததிராய், சத்யா சிவராமன் ஆகியோர் பங்குபெறும் கூட்டம் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும்,  அரசியல்வாதிகள் லாலுபிரசாத், ராம்விலாஸ்பாஸ்வான், டி.ராசா, சுவபன் முகர்ஜி, நீரஜ் சேகர், அம்பேத் ராஜன் போன்றோர் பங்கேற்கும் கருத்தரங்கு மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.

இடம் :  கிருட்டின மேனன் பவன், உச்ச நீதிமன்றம் எதிரில், டெல்லி

இக்கருத்தரங்கு தில்லி தமிழ் மாணவர்களால் மற்ற மாணவர் அமைப்புகளையும் இணைத்து நடத்தப்படுகிறது.

டெல்லியில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தி கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய செய்திநாம் தமிழர் இளைஞர் பாசறையினர் மற்றும் மாணவர் பாசறையினர் பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.
அடுத்த செய்திமே 18 : நாம் தமிழர் கட்சி – மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் – சுவரொட்டி பதாகைகள் தரவிக்க இணைப்பு