‘பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்’ – விக்னேஸ்வரன்

22

வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, ‘இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகாலையிலிருந்து மக்கள் வெடி கொழுத்தி தேர்தல் வெற்றியை கொண்டாடுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனாலும் வெடி கொழுத்தி தேர்தல் வெற்றியை கொண்டாடிய யாழ். பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுவம் அத்து மீறி புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் பதிவாகியுள்ளது.

முந்தைய செய்திமகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.
அடுத்த செய்திதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி!