நாங்கள் உரிமைக்காக போரடிய இனம்என்று பன்னாட்டிற்கு தெரிவித்துகொள்கின்றேன்-அனந்தி சசிதரன்!

33

பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்கா அரசு தமிழ்மக்களை அழித்தது இதற்கு பன்னாடுகள் துணைபுரிந்தன ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நான் பலசாவல்களை எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளேன் இந்தவெற்றி அனந்தியின் வெற்றியல்ல போரினால்பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வெற்றி இந்த மக்கள் எதற்கு அங்கிகாரம் அளித்திருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது

மக்களின் பிரச்சனையினை மையப்படுத்தித்தான் நான் அரசியலுக்கு வந்தேன் பட்டம் பதவி என்பது எனக்கு தேவையில்லை மக்களுக்கான சேவையினை நான் தொடர்ந்து செய்யவுள்ளேன் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்வடமாகாணசபையில் ஒருபெண் வேட்பாளர் அனந்தி சசிதரன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்கள் போரின் பின்னர் வடமாகாணத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுமலச்சிக்கு நான் உழைக்கவுள்ளேன் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக சிறீலங்கா அரசு நடத்திய போரிற்கு பன்னாடுகள் உதவியது ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன்.

தமிழ்மக்களின் பிரச்சனைக்கான நியாயமான தீர்வினை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எங்களுக்கு வழங்கவேண்டும் என்று தெரிவிக்கின்றேன் என்றும் தெரிவித்த அனந்தி சசிதரன்
என்மீதான தாக்குதலை தொடுத்தார்கள் அதற்கு உலகத்தமிழர்கள் உலகத்தமிழ் ஊடகங்கள் கைகொடுத்தன இதுதான் என்முறியடிப்பு சமராக காணப்பட்டது அதற்காக புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திதேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேசிக்குமா?
அடுத்த செய்திவடக்கில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்