தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

21

வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தலை, முகம், கால்களில் கொட்டன்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த இவர் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார். இளவாலையில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவத்தில், சுதுமலை தெற்கைச் சேர்ந்த இராசநாயகம் பென்ஸ்ரன் என்பவர் படுகாயமடைந்திருந்தார். யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பாக நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில், கோப்பாயிலுள்ள 21 ஆவது பிரிவு கட்டளைத் தளபதிக்கும், இளவாலைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் ஆணைக்குழுவால் விளக்கம் கோரி அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபுலிகளிடமிருந்து மக்களை படையினர் மீட்டிருந்தால் ஏன் அவர்கள் அரசிற்கு வாக்களிக்கவில்லை? டுவிட்டரில் ஜனாதிபதியிடம் கேள்வி!
அடுத்த செய்திஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு!