யாழ்ப்பாணத்தின் ஒட்டுக்குழுவின் ஆதிக்கத்தில் இருந்த தீவக பகுதிகள் தற்போது கூட்டமைப்பின் கைகளுக்குள் விழுந்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தீவக பகுதிகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும் வகையில் இரவுநேரங்களில் வன்முறைக்கும்பல்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்டப்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுக்குழுவின் கோட்டையாக விளங்கும் ஊர்காவற்துறையும் கூட்டமைப்பின் கைகளில் விழுந்துள்ளதால் பழிவாங்கும் படலம் இரவு நேரங்களில் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் திட்டமிடப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள் கூட்டமைப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ள ஊர்காவற்துறை,மெலிஞ்சிமுனை,தம்பாட்டி,புளியங்கூடல்,நாதரந்தனை தெற்கு,பகுதிகளில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள்ள இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்.