தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை – இரா.சம்மந்தன்

63

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை என தழிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இரா.சம்மந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட, தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவாக வாசித்தறியாத காரணத்தினாலேயே பொருத்தமற்ற விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருமித்த நாட்டிற்குள் அடிமைகளாக இல்லாமல், தமிழர்கள் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடியவர்களாகவும், கௌரவம், சுயுமரியாதையுடுன் தொடர்ந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு போதிய அளவு அதிகாரங்கள் சுயாட்சியின் மூலம் வழங்கப்பட வேண்டும் என்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நண்பகர் 11 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்மந்தமாகவும், காணமல் போனவர்கள், காணிப்பிரச்சினை போன்ற பல விடையங்கள் தொடர்பாகவும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அத்தேர்தல் விஞ்ஞாபனம் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. நாங்களும் அதனை பலரிடம் விநயோகித்திருந்தோம்.

அதற்குப் பின்னர் சில கருத்துக்கள் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்திருக்கின்றன. எல்லோரும் இந்தக் கருத்தினை கூறுவதாக நாம் சொல்லவில்லை. ஆனால் தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத சக்திகள் தேர்தலி விஞ்ஞாபனம் தொடர்பாக சில தவறான கருத்துக்களை கூறியுள்ளார்கள்.

ஜனாதிபதி 2 நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் போசும் போதும் விஞ்ஞாபனம் தொரடர்பாக கருத்து கூறுகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் கேட்டதையே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோரிநிற்கின்றது, தமிழீழ விடுதலைப் புலிகள் இதைக் கேட்ட போது நாங்கள் அதனை வழங்கவில்லை, அவர்களுக்கு நாங்கள் ஒரு முடிவு கட்டியிருக்கின்றோம், தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதனை வழங்கத் தயாரில்லை என அவர் கூறியிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எதைக் கேட்டார்கள் என்று அவர் சொல்லவில்லi. நாங்கள் தற்போது எதனை கேட்கின்றோம் என்றும் அவர் சொல்வில்லை. ஆனால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றவகையில் அவருடைய கருத்து அமைகின்றது.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை அவர் படித்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைக் கேட்கின்றது என்பது தெளிவாக அவருக்கு விழங்கியிருக்க வேண்டும். சில தீவிரவாக பெரும்பான்மையின சக்திகளும் இது போன்ற கருத்துக்களை கூறிவருகின்றன. இதனால் ஒரு அரசியல் தீர்வு சம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஒரு அரசியல் தீர்வு சம்மந்தமான சமீப காலத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். அதனூடாக ஒருமித்த நாட்டிற்குள் உண்மையான, விசுவாசமான, போதுமான அளவிற்கு அதிகாரப்பகிர்வு தேவை என்றதை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். அத்தீர்வு எந்தவகையில் அமைய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும் குறியிருக்கின்றோம்.

அத்தீர்வினைப் பொற்றுக் கொள்ள நாங்கள் எவ்வகையான செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். அந்தக் கருத்துக்களில் கூட ஒரு மித்த நாட்டிற்குள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என்று மிகவும் தொளிவாக கூறியுள்ளோம்.

தமிழில் வெளியிடப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் 7 ஆம் பக்கத்திலும், 8 ஆம் பக்கத்திலும், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தின் 6 ஆம் பக்கத்தில் இருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியது ஒருமித்த நாட்டிற்குள் ஒரு தீர்வையே நாங்கள் கேட்டிருக்கின்றோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்குறிப்பிட்ட பந்திகள் தான் அவர்களை குழப்பத்தில் ஏற்படுத்தி இருக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் தெளிவாக கூறவருவது என்னவேன்றால்.

ஜ.நாவினுடைய அரசில் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற சிவில் அரசியல் உரிமை சம்மந்தமாகவும், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்மந்தமாக உருவாகியுள்ள ஒப்பந்தம் இரண்டிலும் குறிப்பிட்டிருப்பது என்னவேன்றால், ஒரு மக்கள் குழாமிற்கு சுயநிர்ணைய உரிமைக்கு உரித்துண்டு என்று கூறப்பட்டுள்ளது.

அதனையே நாங்களும் கூறுகின்றோம். எமது சிவில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடையங்கள் சம்மந்தமாக நாம் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் எங்களுடைய தலைவிதியை நிர்ணையிக்கும் உரிமை எமக்கு உண்டு என்பதை. இதனால் இலங்கையினுடைய அரசியல் சாசனத்தை மீறுவது என்பது பொருளல்ல.

சர்வதேச அளவில் தற்போது சுயநிர்ணைய உரிமை சம்மந்தமாக பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனடிப்படையல் உள்ளகசுயநிர்ணைய உரிமை, வெளியகசுயநிர்ணைய உரிமை என்று இரண்டு வகையாகக் கொள்ளப்படுகின்றது.

உள்ளக சுயநிர்ணைய உரிமை என்றால், ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்கள் குழாம் தங்களுடைய சிவில், பொருளாதாக,கலாசரம் சம்மந்தமாக அபிலாசைகளை ஒருமித்த நாட்டிற்குள் நிறைவேற்றுவது. வெளியக சுயநிர்ணைய உரிமை என்றால், முற்றாகப் பிரிந்து செல்வது. அதாவது தனிப்பட்ட இறமைக்கு உரித்தாவதாகும்.

ஒருமித்த நாட்டிற்குள் பெரும்பான்மை இனத்திற்கு நாங்கள் அடிமையாகப் போகாமல், நாங்கள் எமது நாட்டில் எமது பிரதேசத்தில் கௌரவத்துடன், சுயமரியாதையுடன், பாதுகாப்புடன் தொடர்ந்து வாழ போதிய அளவு அதிகாரங்கள் சுயாட்டி மூலம் வழங்க்பட வேண்டும் என்று கேட்கின்றோம். இதனால் நாங்கள் தனிநாட்டை கோருவதாக அர்தம் இல்லை.

ஜனாதிபதியும், வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை கவணமாகப் படிக்க வேண்டும் என்று நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தவறான கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்த கூடாது. நிச்சைமாக தமிழ் மக்கள் குழம்புவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் பெரும்பான்மைஇனத்தவர்களும் குழம்பக்கூடாது. ஏன் என்றால் ஒரு அரசியல் தீர்வினை காண்பதற்கு பெரும்பான்மை மக்களுடைய பங்களிப்பும் தேவை என்பதை நாங்கள் உணருகின்றோம்.

ஜனாதிபதி இவ்விதமான ஒரு கருத்தினை முன்வைக்க அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். துரதிஸ்ரவசமாக ஒரு அரசியல் தீர்வு இருக்குமாக இருந்தால் அவ்வாறான ஒரு கருத்தினை அவர்கள் இதுவரைக்கும் முன்வைக்கவில்லை.

2006 ஆம் ஆண்டு சர்வகட்சிக் குழு நியமிக்கப்பட்டது. அதே போன்று 2006 ஆம் ஆண்டு பல்லினங்களை சேர்ந்த நிபுணர் குழுவினை நியமித்துள்ளார். இவ்விரு குழுக்களுடைய நியமனங்களும் அரசியல் தீர்வு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பதற்கே உருவாக்கப்பட்டது.

ஆனாலும் சர்வகட்சிக் குழ மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் அரசாங்கத்திடம் வழங்கிய அறிக்கை இதுவரைக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதே போன்று பல்லின நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்தும் அது இன்றுவரை நடைமுறைப்படடுத்தப்படவில்லை. இதற்கிடையில் சர்வதேச சமூகத்துடன பலவிதமான பேச்சுவார்த்தகைகளும் இடம்பெற்றது. இப்போச்சுவார்தைகள் மூலமும் கூட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அதிலும் அரசில் தீர்வு தொடர்பாக கூறப்பட்டிருந்தது. ஆனாலும் இதில் எதனையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் பதில் தருவதாக கூறினால்கள். அதற்கு இன்றுவரைக்கும் பதில் இல்லை. பதில் தரமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. நல்லிணங்கத்தின் சிவார்சுகளும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு சம்மந்தமாக இன்றுவரைக்கும் எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டது. இந்நிலையல் அரசாங்கத்தின் விஞ்ஞாபனம் எங்கே? விஞ்ஞாபனத்தை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்காலம் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.

முந்தைய செய்திமுல்லைத்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!
அடுத்த செய்திசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது மாவீரர் உதைபந்தாட்டம் 2013