தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை தாயகத்திற்கு அழைக்கும் சிறீலங்காவின் திட்டம்!

23

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான சிறீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

மீண்டும் இலங்கைக்கு வருகைதருவதற்கு விரும்பும் இலங்கையர்களுக்கு சென்னையிலுள்ள பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.
இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதில் எவ்வித பிரச்சினைகளும் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.இதேவேளை இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் பிரசாத் காரியவசம் சுட்டிக்காட்டினார்.மாதாந்தம் சிலர் நாடு திரும்புவதாகவும் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.