சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும் அது சாத்வீகப் போராக வெடிக்கும்!

28

இந்த மண்ணிலே நாங்கள் ஒரு சமஸ்டி அமைப்போடு வாழ விரும்புகிறோம். அதை இந்த சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும். அது சாத்வீகப் போராக வெடிக்கும். அப்போரில் நாங்கள் வெல்வோம் என தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் மாலை 4 மணியளவில் மங்கள விளக்கேற்றல் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம் த.குருகுலராசா சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை குகராசா உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன் சி.சுப்பையா வி.சுவிஸ்கரன் ம.அன்ரன் டானியல் ( ஒஸ்மன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணித் தலைவர் சு.சுரேன் கட்சி செயற்பாட்டாளர் தி.சிவமாறன்பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.