வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளது. வடக்கின் இளைஞர்களை மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்துவதற்கான மறைமுகமான கோரிக்கையினையே விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார் என விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஒருங்கமைப்பாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார். மேலும் நாடு கடந்த தமிழ் ஐக்கியத்தை உருவாக்கியதே நான் தான். அதன் விளைவுகளை பின்னரே நான் உணர்ந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இராணுவத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முகப்பு தமிழீழச் செய்திகள்