சிறீலங்காவின் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்வு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்வு வந்துள்ளது என்று கூட் டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலை வர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது அரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல அரசாங்கத்தின் குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் இந்த கருத்திற்கு எதிர்கருத்தினை சம்மந்தன் தெரிவித்துள்ளார்