தேர்தலின் பின்னர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

18
வடக்குமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதில் இருந்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக நேற்று மாலை 2 மணியளவில் யாழ்.கோண்டாவில் பகுதியில் வைத்து நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறை நிலையத்தில் நல்லூர் பிரதேச சபை தவிசாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை 2 மணியளவில் கழிவுகளை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் கோண்டாவில் சுடலைப் பகுதிக்கு குறித்த ஊழியர்கள் சென்றுள்ளனர்.

இதன் போது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் வழிமறித்து அவர்கள் மீது பொல்லு, இருப்புக் கம்பி மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் படுகாயடைந்த 3 பேரையும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர் என்று மேலும் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார்.
அடுத்த செய்திகாணி அதிகாரம் இல்லையேல் விளைவுகள் பாரதூரமாக அமையும்-கூட்டமைப்பு!