வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன் குளம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார் இதனால் அங்கு வாக்களிப்பதற்கு வருகைதந்திருந்த 24 வயதான நா.தவராசா காயமடைந்துள்ளார். துப்பாக்கி சன்னம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பட்டே அவரது காலில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது பதட்டத்தில் நடந்த தற்செயலான சம்பவம் என பொலிசார் கூறியுள்ளனர்.
முகப்பு தமிழீழச் செய்திகள்