ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற அமெரிக்க பிரதிநிதி உரையாற்றும் போது இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியிருந்தார். இதற்கு ஜேர்மனிய பிரதிநிதி ஆதரவளித்திருந்தார். கொழும்பு கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல், ரத்துபஸ்வல குடிநீர் போராட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமெரிக்கப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முகப்பு தமிழீழச் செய்திகள்