இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் கட்சிகள் சமாதானமான முறையில் தேர்தலில் ஈடுபடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த தேர்தல், அரசியல் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பு தமிழீழச் செய்திகள்