இராணுவ தளபாட கொள்வனவு மோசடி: இலங்கைக்கு 14வது இடம்

19

இராணுவ தளபாட கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்ட நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 82 நாடுகள் குறித்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதிலேயே இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. அல்ஜீரியா, அங்கோலா, கெமரூன், ஐவரிகோஸ்ட், கொங்கோ, எகிப்து, ஈரான், எரித்திரியா, லிபியா, கட்டார், சவுதிஅரேபியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கின்றன. இராணுவ தளபாட கொள்வனவு ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் உள்ளன.

முந்தைய செய்திசண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் நாட்டைவிட்டு வெளியேறினார்!
அடுத்த செய்திபுதுடில்லியில் நாளை சல்மான் குர்ஷித்தை சந்திக்கிறார் பீரிஸ்