“மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்”திருவாரூர் தெற்கு மாவட்டம்பரப்புரைப் பயணம்.

17

நிலத்தடிநீர்மட்டத்தைக் குறைத்து,விவசாயத்தை அழித்து தமிழர்களின் வாழ்வாதாரத்தைப்பறிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர்கட்சி உழவர் பாசறை சார்பில்மன்னார்குடி,நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த மீத்தேன் கிணறுதோண்ட திட்டமிடப்பட்டுள்ள கர்ணாவூர்,அரவத்தூர், சவளக்காரன்,அரிச்சபுரம் ,கீழாலவந்தசேரி ஆகிய ஊர்களின் மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்த பரப்புரைப் பயணம்–23.06.2013 அன்று நடைபெற்றது.பேரழிப்புக்குஎதிரான பேரியக்கத்தின் அமைப்பாளர் க.கா.இரா.இலெனின் காலை 11 மணிக்குதுவக்கி வைத்தார்.நாம் தமிழர் கட்சிமன்னை ஒன்றிய செயலாளர் தி.ப.சரவணன் தலைமைவகித்தார்.30 நாம் தமிழர் போராளிகள்50 கிலோமீட்டர் கிராமப் பகுதிகளுக்கு மாலை6 மணி வரை சென்று துண்டறிக்கைஅளித்து பரப்புரைசெய்தனர்.