நாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

19

தமிழ் மாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை , 15 வேலம்பாளையம் மேல்  நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டியும்,மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவுக்கூடம் அமைத்துத் தரவும், சமையலறை மற்றும் கழிப்பிடம் அருகருகே இருப்பதால் மாற்றி மற்றொரு இடத்தில் அமைக்குமாறு வேண்டியும், கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பிக்கும் நிகழ்வு. திருப்பூர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் சமரன் பாலா, மாவட்ட பொருளாளர் பரமசிவம்,மற்றும் 15 வேலம்பாளையம் கிளை நிர்வாகிகள் ரமேசு,அருண்,முத்துப்பாண்டி,சபாபதி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்

பெறுனர் : :மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள்
திருப்பூர் மாவட்டம்

பெருமதிப்புக்குரிய அய்யா, வணக்கம் !

பொருள் : 15 வேலம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டி

மாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1.தற்போது 15-வேலம்பாளையம்     மேல்  நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்களை உடைய வகுப்புக்களை உடனடியாக வரும் கல்வியாண்டில் துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. சமையலறை மற்றும் கழிப்பிடம் அருகருகே இருப்பதால் மிகுந்த துர்நாற்றத்தோடு உணவைத் தயாரிக்கவும் , பெறவும் வேண்டியிருக்கிறது. இதனால் சுகாதாரக் குறைவு ஏற்பட்டு மாணவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள்.இதைத் தவிர்க்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக எதாவது ஒன்றை மாற்றி மற்றொரு இடத்தில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
3, மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவுக்கூடம் அமைத்துத் தர வேண்டுகிறோம். தற்போது வெட்ட வெளியில் கடும் வெய்யிலில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியம் அவலம் இப்போது உள்ளது.

ஆகவே உடனடியாக தாங்கள் தலையிட்டு மேற்கண்ட விடயங்களை உடனே செய்து தர வேண்டுகிறோம்

தாழ்மையுடன்,

சமரன் பாலா
இணைசெயலாளர் – திருப்பூர் வடக்கு மாவட்டம்
கையொப்பம் : 15 வேலம்பாளையம் பகுதி மாணவர்கள், பொதுமக்கள்