திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 27வது வட்டக்கிளை திறப்பு

24

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 27வது வட்டக்கிளை
திறப்பு விழா 21.04.2013அன்று நடைபெற்றது. புலிக்கொடி விண்ணில் பறக்க
பீரிட்டு எழுந்தது வெல்லட்டும் வெல்லட்டும் நாம் தமிழர் வெல்லட்டும்
எனும் முழக்கம்.தமிழர் மண்ணில் திக்கெட்டும் புலிக்கொடி பறக்க வேண்டும்
என்பது நாம் தமிழரின் லட்சியம். இந்த உணர்ச்சிமிகு நிகழ்விற்கு
உறுதுணையாய் நின்றவர்கள் 27வது வட்ட அமைப்பாளர்கள்
சத்தியமூர்த்தி,ஐயப்பன், இதயா ,சந்திரசேகர், மணிகண்டன், பாண்டித்துரை,
லோகேசுவரன், கார்த்திக் மற்றும் 23வது வட்ட அமைப்பாளர்கள்
சுரேசு,செகதீசு,பிரகாசு மற்றும் கராத்தே கண்ணன் . கோவை மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சந்திரன் கொடியேற்றி சிறப்பித்தார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சமரன் பாலா, செல்வம்,
கௌரிசங்கர்,பரமசிவம் , சிவகுமார் தலைமை வகித்தனர். மணடலத் தலைவர்
கரிகாலன்,தெற்கு மாவட்டதலைவர் மோகன் மற்றும் நாம் தமிழர் திருப்பூர்
மாவட்ட உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.