சேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம்

34

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் ஓமலூரில் 28.04.2013 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டமானது நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு செயற்குழு கூட்டத்தை சிறப்பித்தனர்.

 

இக்கூட்டத்தில் கடலூரில் நடக்கவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்கவிழா மே-18 குறித்தும், அந்த விழாவில் பங்கேற்பது குறித்தும், அதற்கான பிரச்சாரம், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டி, துண்டறிக்கைகள், பதாகைகள், மற்றும் ஊடக விளம்பரங்கள் போன்றவை குறித்தும் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

 

இச்செயற்குழு கூட்டத்தின் வாயிலாக சில உணர்வாளர்கள் தாங்களாகவே முன்வந்து நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டத்தின் கட்சி செலவுகளுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இது எனது சிறு உதவியாக நினைத்து வைத்துகொள்ளுங்கள் என்று கூறி ரூ.20,600/- தொகையை கொடையாக அளித்துள்ளனர். இந்த தொகை சிறியதாக இருந்தாலும் இதனை கொடுக்க முன் வந்த உங்கள் மனது மிகவும் பெரிது என்று அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் மே-18 பொதுக்கூட்டத்திற்கு பணமாகவும், பொருளாகவும் மற்ற அனைத்து வகையான உதவிகளையும் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்திதூத்துக்குடி பொதுக்கூட்டம் 29-4-2013
அடுத்த செய்திதூத்துக்குடியில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம். – 29/4/2013