திருவாரூர் மாவட்டம் வடுவூரில் இராசபட்செ மீது பன்னாட்டு விசாரணை கோரி பொதுக்கூட்டம்.

16

இன அழிப்பு குற்றவாளி இராசபட்செ மீது பன்னாட்டு விசாரணை கோரியும்,ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரியும் ,காங்கிரஸ் -தி.மு.க தமிழின எதிர்ப்பு கூட்டணியை கண்டித்தும்,பெரும் திரளாக மக்கள் பங்கேற்ற,நாம்தமிழர் பொதுக்கூட்டம்,திருவாரூர் தெற்கு மாவட்டம்,வடுவூரில் 10.03.2013 அன்று நடைபெற்றது.துருவன்,மணிசெந்தில்,நல்லதுரை,கோவை கல்யாணசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்கள்.கூட்டத்தில் 100 அடி நீளம்,10 அடி உயரம் கொண்ட ஈழப்படுகொலை துயரக்காட்சிகள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதைப் பார்த்து இராசபட்செ,மீதும் காங்கிரஸ் தி.மு.க இன அழிப்பு கூட்டணி மீதும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.