சேலம் மாவட்டம், எடப்பாடியில் தொடர் பட்டினி போராட்டம்

38

சேலம் மாவட்டம், எடப்பாடியில் நாம் தமிழர் கட்சி, மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து 23.03.2013 சனி முதல் தொடர் பட்டினி போராட்டத்தை மேற்கொண்டனர்.
இப்போராட்டத்திற்கு மாற்றுத்திரனாளிகள், எடப்பாடி பகுதி மாணவர்கள், பொது மக்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் சில ரசிகர் மன்றத்து தம்பிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவர் கூட்டமைப்பை சார்ந்த பழ.மதிவாணன், சீனிவாசன் ஆகியோர் இறுதிவரை சிறப்பாக போராட்டத்தை வழி நடத்தினார்கள்.
கொங்கனாபுரத்தை சார்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வணங்காமுடி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சில ஆலோசனைகளும் வழங்கினார்.

பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணா நிலை போராட்டத்தை மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும், தொடர்ச்சியாக வேறு வடிவத்தில் இந்த அறப்போராட்டத்தை வடிவமைக்கலாம் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.