கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாநிலைபோராட்டம்

9

சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக உண்ணாநிலைபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்ட மாணவர்களின் கோரிக்கைகள்:

1. தனி தமிழீழம் ஒன்றே தீர்வு.

2. இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசு குறித்த ராசபக்சேவை சர்வதேச நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும்.

3. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு குறித்த ராசபக்சேவை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்படவேண்டும்.

4. சிங்கள இனவெறி குறித்த இலங்கை ராணுவத்தினர் இன்று வரை தமிழக மீனவர்களை கொன்று குவிப்பதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

5. இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தின் உண்மை நிலை கண்டறிந்து சர்வதேச அளவில் ஈழதமிழர்களுக்கு நீதி கிடைக்க அத்தீர்மானத்தை மாற்றி, திருத்தும் செய்து இந்தியாவே முன்மொழிய வேண்டும்.

6. தனித்தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடி கொண்டிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் அமைப்பைச் சார்ந்த ச.திலீபன் அவர்களும் மாணவர்களுடன் போராட்த்தில் பங்கேற்றுள்ளார்.