ஒரு நாள் தொடர் முழக்க பட்டினி போராட்டம்

32

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஜானகிஅம்மாள் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து 24.03.2013 ஞாயிறு அன்று தொடர் முழக்க பட்டினி போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த தொடர்முழக்க பட்டினி போராட்டத்தில் கொங்கணபுரம் வணங்காமுடி, யுவராசு, வச்ரவேலு, ஆட்டையாம்பட்டி சிவா, சசி, மேச்சேரி வெங்கடாசலம், அமுதாநம்பி, அருள்ராம், செல்வமணி, அறிவுச்செல்வன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் கோவை சட்ட கல்லூரி மாணவர்களும் இதில் பங்கு வகித்து சிறப்புரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள், மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கலந்து கொண்ட இந்த தொடர் முழக்க பட்டினி போராட்டத்தை வேறு வடிவத்தில் கொண்டு தொடராலாம் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திசேலம் மாவட்டம், எடப்பாடியில் தொடர் பட்டினி போராட்டம்
அடுத்த செய்திஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!