நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் (மே)மாவட்டத்தை சேர்ந்த திருவாலங்காடு கிராமத்தில் 15.07.2012 அன்று மாலை 4 மணி அளவில் கிராம வீதிகளில் தொடர் தமிழக பிரச்சனைகள்,திராவிட ஆட்சியால் தமிழர்களின் நிலைகுறித்து வீதி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.மாலை 6 மணி அளவில் நாம் தமிழர் திருவள்ளூர் ஓயாத அலைகள் பறை முழக்கத்திற்கு பிறகு இலங்கையில் கொலைக்களம் திரையிடப்பட்டது.துவக்க உரை இளந்தமிழன் வழங்கினார்.அதை தொடர்ந்து இன்றைய தமிழக அரசியல் குறித்தும் தமிழர்களின் வாழ்நிலை குறித்தும் சிவசங்கர்,செந்தில்(எ)தாமரை செல்வன்,ரமேஷ்(எ)இரணியன் ஆகியவர்களால் வழங்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.பொதுமக்கள் அதரவு கொடுத்து கூட்டத்தை அமைதியாய் பார்த்தார்கள்.நம் உறவுகள் கொல்லப்பட்ட கட்சியை கண்டு வேதனையுடன் நம்மை அங்கிருந்து அனுப்பினார்கள். இரவு உணவு தோழர் இளந்தமிழன் அவர்களின் வீட்டில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அனைத்துப் படங்களையும் பார்க்க கீழே அழுத்தவும்:
நன்றி,
செந்தில் என்கிற தாமரை செல்வன்
9600709263