கும்பகோணம் பள்ளி விபத்தில் பலியான குழந்தைகளு​க்கு நாம் தமிழர் கட்சி அஞ்சலி!!

49

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதன் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அஞ்சலியும் இரங்கல் உரையும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்குமாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர்.மணி செந்தில் தலைமை தாங்கி இரங்கல் உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் சிங்காரவேலு ,.மாவட்ட இணைச்செயலாளர் முனியசாமி ,நகரச்செயலாளர் ரகமதுல்லா,நகரத்தலைவர் முரளிதரன், மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் மோ. ஆனந்த், நகரப் பொருளாளர் கண்ணன்,ஒன்றிய செயலாளர் ஜெஸ்டீன், நகர இணைச்செயலாளர் வடிவேலு,நகர துணைச்செயலாளர் வீரமணி ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.