கும்பகோணத்​தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்​கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு​க் கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

46

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கும்பகோணத்தில் கடந்த 13-07-2012 அன்று ஹோட்டல் ராயா கூட்ட அரங்கில் பொறுப்பாளர்கள் தேர்வும், கலந்தாய்வுக் கூட்டமும் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தார். இக்கூட்டத்தில் தஞ்சை மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை, மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர்.மணி செந்தில்,மருத்துவர் சித்தார்த்தன், ஆன்றோர் அவைய உறுப்பினர் முனைவர்.ச.மணி உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர்.கட்சியின் பொறுப்பாளர்களின் பணி குறித்தும் சமீப கால அரசியல் நிலை குறித்தும் செந்தமிழன் சீமான் உரையாற்றினார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக வழக்கறிஞர்.இரா.வினோபா, தலைவராக ஒவியர் சிங்காரவேலு, துணைத்தலைவராக அன்சாரி, இணைச்செயலாளராக முனியசாமி, பொருளாராக பிரதீப் குமார் ,மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளராக ஆதி.குமரவேல், மாவட்ட வழக்கறிஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர்.மோ.ஆனந்த் ,மாவட்ட தொழிலாளர் பாசறை அமைப்பாளர் காஜா ஜெயினுலுலாவுதீன், மாவட்ட மகளீர் பாசறை அமைப்பாளர் சி.சுமதி ,கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அமைப்பாளர் .இரா வீரப்பன் ஆகியோரும் கும்பகோணம் நகரச்செயலாளராக ரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன் , நகரத்தலைவராக முரளிதரன்,துணைத் தலைவராக புருசோத், இணைச்செயலாளராக வடிவேல், துணைச் செயலாளராக வீரமணி,பொருளாளராக கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கும்பகோணம் ,பாபநாசம், திருவிடைமருதூர் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.