மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

14

இன்று ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்  அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக உறுதி அளிக்கும் பட்சத்தில் திமுகவும், திருமாவளவனும் பிரணாப் குடியரசுத் தலைவராக ஆதரவு அளிக்கலாம் என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும். இதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மேலும்..

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 வருடங்கள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபட்ச பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 வருடங்கள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றார்.