திருவள்ளூர் (மே) மாவட்ட திருத்தனி பகுதி தெக்கலூர் கிராமத்தில் 17/06/2012 அன்று நடந்த தெருமுனை பரப்புரை (படங்கள் இணைப்பு )

66

திருவள்ளூர் (மே) மாவட்ட திருத்தனி பகுதி தெக்கலூர் கிராமத்தில் 17/06/2012 அன்று இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதையும்,தமிழக தொடர் பிரச்சனை குறித்து வீதி பிரச்சாரம் செய்யப்பட்டது.கிராமத்தின் மையபகுதியில்,ஓயாத அலைகள் திருவள்ளூர் பறை இசை குழு பறை இசை முழங்கி மக்களை கூட்டி,இலங்கையில் கொலைக்களம் கானொளி காட்சி திரையிடப்பட்டு விளக்கவுரை,மற்றும் மூவர் மரணதண்டனை குறித்து விளக்கம் இளந்தமிழன்,சிவசங்கர்,ஜெயசங்கர் மற்றும் ரமேஷ்(எ)இரண்யன் ஆகியவர்களால் வழங்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.பொது மக்கள் நாம் தமிழர் வேண்டும் என்ற கருத்துடன் களைந்து சென்றார்கள். பாபு என்கிற தெக்கலூர் பகுதி தோழர் நம்முடன் இணைத்தது மட்டுமல்லாமல் நமக்கு இரவு விருதளித்து உபசரித்தார்கள்.இதனை எங்கள் கடமையாக காலம் எங்களுக்கு கையளித்திருக்கிறது என்பதை உணர்த்து காலமாடிகொண்டிருக்கிறோம் நிச்சியம் வெல்வோம். எங்களுடன் இணைந்து செயல்பட விரும்பும் தோழர்கள் (9600709263,8883930008,9629992589,7373432219) அனைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்.

முந்தைய செய்திநாமக்கல் வடக்கு கொள்கை விளக்கக்கூட்டம் 17-06-2012
அடுத்த செய்தி17-06-2012 அன்று நடந்த நாமக்கல் மாவட்டம் (வடக்கு)-கொள்கை ஆவண விளக்கக் கலந்தாய்வு கூட்டம் -படங்கள் இணைப்பு