10-06-2012 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-நிழற்படங்கள் இணைப்பு

13

நாம் தமிழர் திருவள்ளூர் [மே ] மாவட்டம் சார்பாக திருத்தணி பகுதியில் உள்ள அம்மையாகுப்பம் என்னும் கிராமத்தில் 10 /6 /2012 அன்று ” சேனல் 4 மற்றும் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடை பெற்றது … சுமார் 3 அளவில் கிராமம் முழுதும் ” இன முழக்கம் ”செய்து கொண்டு தோழர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர் .. பிறகு ஊருக்கு பொதுவான இடத்தில் பதாகை கட்டப்பட்டு ” ஓயாத அலைகள் கலை குழுவினர் ” பறை இசை முழங்கினர் .. பறை இசை முழக்கம் நம் சொந்தகளை கட்டி இழுத்து வந்து திடல் நிறைத்தது . பின்னர் மாவட்ட ஒருங்கிணைபாளர்கள் ,திரு ரமேஷ் என்கிற இரண்யன் . திரு இளந்தமிழன் .திரு சிவஷங்கர் , திரு செந்தில்குமார் .திரு ஜெயசங்கர் ஆகியோர் கொள்கை விளக்க உரைவீச்சு நடத்தினர் .. பின்னர் ” சேனல் 4 கொலை களம் ” திரை இடப்பட்டது .. நமது சொந்தங்கள் ஈழத்தில் படும் பாட்டை தை தமிழ் உறவுகள் கண்ணீரோடும் அதிர்ச்சியோடும் பார்த்தனர் .. அந்த திடல் மிகுந்த அழ்ந்த அமைதியோட நமது சொந்தங்கள் எழுப்பிய ஓலக்குரல் எங்கும் எதிரொலித்தது .. நிறைவாய்” விழ விழ எழுவோம் ” என்ற பாடல் ஒலிக்க கூட்டம் கண்ணீர் துடைத்து நிமிர்ந்தது …” எதாவது நிச்சயம் செயனும்யா” என்று பேசியபடி கலைந்தது .நாம் தமிழர் தோழர்கள் அங்கேயே கூடி அடுத்த காலத்தினை 17 /6 /2012 அன்று திருத்தணி பகுதி ” தெக்களுரில்”களம் அமைப்போம் என்று முடிவெடுத்தனர்..நாம் தமிழர்
                                                                                                                                       

தொடர்புக்கு தாமரைசெல்வன் (எ) செந்தில் குமரன் [ திருவள்ளூர் மாவட்டம் எந்த பகுதிக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய தொடர்புக்கு 8883930008,7373432219,9600709263 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும் ]