விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த பொதுகூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

23

நிகழ்வுக்கு சென்றிருந்த நாம் தமிழர் உறுப்பினர் சே. பக்கியரசன் முகநூளில் பதிவு செய்திருந்த குறிப்பு பின்வருமாறு:

தமிழகத்தின் கடைகோடி கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பேரூராட்சியில்.. நேற்று நாம் தமிழர் பொதுக்கூட்டம்..அந்த ஊரில் மூவாயிரத்திற்கும் மேற்போட்டோர் கூடி நின்றார்கள்.. எங்கு திரும்பினாலும் எம் தலைவர் படம் தாங்கிய பதாகை.. எம் தலைவரை உயிராய் ஏந்தி முன்னால் நின்ற இளைஞர் கூட்டம்.. அவர் பெயரை யார் உச்சரித்தாலும் ஆர்ப்பரிக்கிறார்கள்… பெண்கள் அதிகளவில் பின்னாடி நின்றார்கள்.. முதலில் அந்த ஊரை சார்ந்த ஒரு 20 வயது மதிக்கதக்க இளைஞனும் அதற்கும் குறைவான வயதுடைய ஒரு சகோதரியும் பேசினார்கள்.. சமகால அரசியலை பற்றியும், தேசிய தலைவரை பற்றியும், தமிழீழத்தின் அவசியம் பற்றியும், திராவிடத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் பேசியதை கேட்டு உண்மையில் நான் அசந்துவிட்டேன். அங்கே கூடியிருந்த கூட்டமும், சீமான் அண்ணன் அவர்கள் கருத்துகளை உள்வாங்கிய விதமும் மிகுந்த நிறைவை தந்தது..

#நான் கூட்டத்திற்குள் சுற்றி திரிந்து கருத்துக்களை கேட்டவரையில்.. நாம் தமிழர் சரியான அரசியலில் சீராக பயணிக்கிறது..