நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் 21-04-12 சனிக்கிழமையன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கந்தநூரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து மாலையில் மேச்சேரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினர். மேலும் கட்சியின் மாநில நிர்வாகிகளும், பிற மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியினை சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் சேலம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர். சேலம் மாவட்ட வளர்ச்சிக்கு மாநில அரசு உதவிட வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்