அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு

982

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது.

சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு,நாம் தமிழர் கட்சியின் சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மலர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு அம்பேத்கருக்கு மரியாதையை செலுத்தினர்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!